உலகின் மிகவும் இரண்டு புனித மசூதிகளில் அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு இறுதி தொழுகை நடத்தப்பட்டது.
சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ், மறைந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அதொபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு நேற்று மக்ரிப் (மாலை) தொழுகையைத் தொடர்ந்து மக்காவில் உள்ள கிராண்ட் மசூதியிலும், மதீனாவில் உள்ள நபிகள் நாயகத்தின் மசூதியிலும் இறுதிச் இறுதித் தொழுகை நடத்த உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்படி, மசூதிகளில் ஷேக் கலீஃபாவுக்கு இறுதித் தொழுகை நடத்தப்பட்டது. அதில் குடிமக்களும் குடியிருப்பாளர்களும் ஒன்று தொழுதனர்.
இது குறித்து சவுதி அரேபிய மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், “ஐக்கிய அரபு ஆமீரகத்தின் தலைமைக்கும், அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் தங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கிறோம், இந்த பெரும் இழப்பிற்காக எல்லாம் வல்ல இறவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். ஷேக் கலீஃபாஅவில் குடும்பத்தினருக்கும் ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கும் இறைவன் பொறுமை அளிப்பானாக” என்று தெரிவித்தனர்.