UAE Tamil Web

அமீரகம்.. இனி ஆன்லைன் மூலம் Black Mail செய்பவர்களுக்கு “ஆப்பு” Confirm.. 5,00,000Dh வரை அபராதம் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமீரகம்

அமீரகத்தில் பப்ளிக் ப்ராசிகியூஷன் வெளியிட்ட தகவலின்படி, ஆன்லைன் மூலமாக யாரையாவது உங்களை மிரட்டினாலோ அல்லது Black Mailசெய்தாலோ குறைந்தபட்ச அபராதம் 2,50,000Dh முதல் அதிகபட்சமாக 5,00,000Dh அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

அந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு இடுகையில், 2021ம் ஆண்டின் ஃபெடரல் ஆணை எண். 34ன் 42 வது பிரிவுக்கு இணங்க, மின்னணு குற்றங்கள் மற்றும் வதந்திகளை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த சட்டம் விதிக்கப்பட்டுள்ளதாக பொது வழக்குரைஞர் கூறினார்.

சட்டத்தின்படி, மற்றொரு நபரை அச்சுறுத்தும் அல்லது Black Mail மற்றும் அவரது விருப்பத்திற்கு எதிராக ஆன்லைனில் ஏதாவது செய்யும்படி அந்த நபரை வற்புறுத்துபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

அதேபோல யாரேனும் ஒருவரின் கவுரவம் அல்லது அந்தஸ்துக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டு தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தினால் அவர்களுக்கு சிறை தண்டனை 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும்.

இணைய வழியில் நடக்கும் குற்றங்களின் அளவு தற்போது அதிகரித்துக்கொண்டே வருகின்றது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் அவற்றை தடுக்க சட்டங்களை கடுமையாகியுள்ளது அமீரகம்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap