UAE ராஸ் அல் கைமா தொழிலாளர் முகாமில் தீ விபத்து.!

Image - Khaleej Times

ராஸ் அல் கைமா, அல் உரைபி பகுதியில் தொழிலாளர் முகாமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 22 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தொழிலாளர் முகாமில் இருந்த A/C மற்றும் இதர உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தகவல் அறிந்து RAK மத்திய கட்டுப்பாட்டு அறை போலீஸார் உடனடியாக தீயணைப்பு வீரர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் தீ அருகில் உள்ள முகாம்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த முகாமில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டன. இந்த தீயை அணைக்க நீர் மற்றும் நுறைகள் பயன்படுத்தப்பட்டன. மேலும், மலைபோல் எழும் புகையினை கட்டுப்படுத்த சிறப்பு திறன் படைத்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source : Khaleej Times