UAE Tamil Web

புஜைராவின் வெள்ளிக்கிழமை சந்தையில் (Friday Market) பயங்கர தீ விபத்து..!

Firefighter_

புஜைராவின் மஸாஃபி பகுதியில் அமைந்துள்ள வெள்ளிக்கிழமை சந்தையில் (Friday Market) இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து உடனடியாக தீ அணைக்கப்பட்டதாகவும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக் குறித்து புஜைரா சிவில் பாதுகாப்புத் துறைக்கு இன்று அதிகாலை 1.53 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மஸாஃபி மற்றும் அல் மனாமா  தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருக்கிறார்கள்.

வீரர்களின் துரித செயல்பாட்டினால் தீயானது மற்ற கடைகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.

துணி, தரை விரிப்பு மற்றும் பர்னிச்சர் கடைகள் அந்த மார்க்கெட்டில் இருக்கின்றன. ஒருவேளை தீ பரவியிருந்தால் மிகப்பெரிய அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக தீயை உடனடியாக வீரர்கள் அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.