அமீரகத்தில் Humanitarian Cityயின் சிவில் பாதுகாப்பு குழுக்கள் நகரின் குடியிருப்பு அறை ஒன்றில் நேற்று மதியம் ஏற்பட்ட சிறிய தீயை கட்டுப்படுத்தியதாக தகவல் வெளியிட்டுள்ளது. மீட்புக் குழுவினர் உடனடியாக தீயைக் கட்டுப்படுத்தி, தீயை அணைத்தனர்.
மேலும் இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் அல்லது குறிப்பிடத்தக்க இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு பேரூராட்சி நிர்வாகம் மீட்புக் குழுக்களுக்கு உத்தரவிட்டது. அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாகவும் உரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமீரகத்தின் Humanitarian Cityயின் நிர்வாகம், கட்டிடங்களின் தாழ்வாரங்கள் மற்றும் குடியிருப்பு அறைகள் தொடர்பாக செயல்படுத்தப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றியதன் விளைவாக விரைவான அதன் குடியிருப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களை காப்பாற்ற முடிந்தது என்று கூறியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு 30 மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.