அபுதாபியில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறை அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
அல் கலிடியா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது. அப்பகுதி சிவில் பாதுகாப்பு மற்றும் போலீசார் அடங்கிய குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன என்று அஞ்சப்படுகிறது. அருகில் உள்ள கடைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிடத்தில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதாக போலீசார் மேலும் தெரிவித்தனர். மேலதிக தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ சேனல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும். தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் குடியிருப்பாளர்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.