துபாய் மெரினாவின் குடியிருப்பு டவர் ஒன்றில் இன்று அதிகாலை 4 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து துபாய் சிவில் பாதுகாப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த மக்களை பத்திரமாக வெளியேற்றினர். துரிதமாக செயல்பட்ட வீரர்கள் தீயினை அணைத்ததுடன் கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
BREAKING: A Fire Has Broken Out In A Residential Tower In Dubai Marina At 4am On Saturday Morning.
Dubai Civil Defence were on the scene, the fire is being put under control and residents are be safely evacuated. pic.twitter.com/Kipk1ROYsy
— Lovin Dubai | لوڤن دبي (@lovindubai) October 23, 2021
