34.7 C
Dubai
October 22, 2020
UAE Tamil Web

அபுதாபி: 9 மாடி கட்டிடத்தில் பற்றிய தீ.. சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ

Fire

அபுதாபியின் பரபரப்பான பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து பெருமளவில் கரும்புகை வெளியேறுகிறது. ஷேக் ரஷீத் பின் சயீத் தெருவில்(Sheikh Rashid bin Saeed Street) உள்ள 9 மாடி கட்டிடத்தில் இருந்து மதியம் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை எழுந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குடியிருப்பின் முதல் மாடி பால்கனியில் தீ பரவுவதற்கு முன், சஹில் அல் மதீனா உணவகத்திலிருந்து(Sahil Al Madina Restaurant) தீ பரவியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

கட்டிடத்தின் தரை தளம் சிறு வணிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மேலே உள்ள தளங்களில் குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர். தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.



error: Alert: Content is protected !!