UAE Tamil Web

துபாய்: செராமிக் கிடங்கில் பற்றிய தீ – துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்..!

Fire

துபாயில் உள்ள செராமிக் கிடங்கு ஒன்றில் பற்றிய தீயை உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அணைத்ததாக சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

துபாயின் உம் ரமோல் பகுதியில் உள்ள செராமிக் கிடங்கில் வியாழக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. மாலை 4.51 மணிக்கு தீ பரவத் துவங்கியதாக சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

அல் ரஷீதியா தீயணைப்பு நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட உடனேயே வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்திருக்கிறார்கள்.

5.39 மணிக்கு தீயானது அணைக்கப்பட்டதாக சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்திருக்கிறது. இந்த விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.