UAE Tamil Web

துபாய்: பற்றியெரிந்த பள்ளிக் கட்டிடம் – துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்..!

School_

துபாய்: நாத் அல் ஷேபா 3 பகுதியில் அமைந்துள்ள ஜெம்ஸ் மாடர்ன் அகாடமி பள்ளியில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து மதியம் 12.06 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும் நாத் அல் ஷேபா தீயணைப்பு நிலையத்தில் இருந்த வீரர்கள் 12.11 மணிக்கு சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் சிவில் பாதுகாப்புப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் 12.17 மணிக்கு தீயை கட்டுப்படுத்தியதாகத் தெரிவிக்கபட்டுள்ளது. சிறிய விபத்துத்தான் என்றும் இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய பள்ளியின் முதல்வர் நர்கிஷ் கம்பட்டா,” இன்று மதியம் 12 மணிக்கு கேட் 3 -ல் உள்ள காவலர் அறையில் தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்துவந்த வீரர்கள் சிறிதுநேரத்தில் தீயை அணைத்தனர்” என்றார்.