துபாய் அல் ஜடாஃப் பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தை 19 நிமிடங்களில் துபாய் சிவில் டிஃபென்ஸ் குழு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
துபாய் தீயணைப்பு வீரர்கள் அல் ஜடாஃப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தை வெற்றிகரமாக உயிர் சேதமின்றி கட்டுப்படுத்தியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று இரவு 11.45 மணியளவில் தற்காப்பு அறைக்கு தீ விபத்து குறித்து அவசர அழைப்பு வந்தது.
இதனை அடுத்து அல் கராமா மற்றும் அல் ரஷிதியா தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் ஆறு நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு சென்று நள்ளிரவு 12.04 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
வெறும் 19 நிமிடங்களில் தீயணைப்பு வீரர்காள் தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.