39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

துபாய் : மரத் தொழிற்சாலையில் பற்றியெரிந்த தீயை 50 நிமிடத்திற்குள் அணைத்த வீரர்கள்..!

FIre Accident

துபாய் : உம் ரமூல் (Umm Ramool) பகுதியில் உள்ள மரத் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக இன்று பிற்பகல் 2.32 மணிக்கு துபாய் சிவில் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 50 நிமிடத்தில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீ மீண்டும் துளிர்க்காமல் இருக்க,  விபத்து ஏற்பட்ட இடத்தை குளிர்விக்கும் பணி நடைபெறுவதாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட உடனேயே, அல் ரஷிதியா (Al Rashidiya), நாத் அல் ஷிபா (Nad Al Shiba), போர்ட் சயீத் (Port Saaed) மற்றும் அல் குசைஸ் (Al Qusais) ஆகிய 4 சிவில் பாதுகாப்புப் பிரிவு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைத்திருக்கின்றனர். பாதுகாப்பு படை வீரர்கள் இது ஒரு மிதமான தீ விபத்து என்றிருக்கிறார்கள்.

Source: Khaleej Times

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!