UAE Tamil Web

ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு 3 நாட்கள் நடைபெற இருக்கும் வண்ணமிகு வானவேடிக்கை..!

abudhabi fireworks

அபுதாபியில் ஈத் அல் அத்ஹா பண்டிகையின் போது மூன்று நாட்களுக்கு கண்கவர் வான வேடிக்கை நடைபெற இருக்கிறது. அபுதாபியின் முக்கிய பொழுதுபோக்கு இடமான யாஸ் ஐலேண்ட் மற்றும் அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கின்றன.

யாஸ் பே வாட்டர்ஃபிரண்டில் ஈத் அல் அத்ஹா பண்டிகை தினம் முதல் தொடர்ந்து 3 நாள் இரவு 9 மணிக்கு இந்த வாணவேடிக்கைகள் நடைபெற இருக்கிறது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக யாஸ் தீவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் இவை நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவும் நேரடியாக மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

abudhabi fireworks
0 Shares
Share via
Copy link