UAE Tamil Web

அமீரகத்தில் பட்டாசுகள் வெடிக்க திருவிழாக்கள் நடக்க தடை..ஒத்திவைக்கப்படும் பல முக்கிய நிகழ்வுகள் – பல முக்கிய Updates!

கடந்த மே 13 வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இரண்டாவது ஜனாதிபதியான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு நாடு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அபுதாபியில் நடைபெறவிருந்த அனைத்து இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.

கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை (அபுதாபி) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, மேலும் அறிவிப்பு வரும் வரை இசை நிகழ்ச்சிகள் மற்றும் நடனம் இடம்பெறும் அனைத்து பொழுதுபோக்குகளையும் நிறுத்துவதாக அறிவித்தது.

பட்டாசு வெடித்தல் மற்றும் திருவிழாக்களும் நிறுத்தப்பட்டுள்ளன, இருப்பினும் இந்த துக்க காலத்தில் திருமணங்கள் நடத்த அனுமதி உண்டு. ஆனால் திருமண நிகழ்வுகளில் இசை இசைக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வு முன்பதிவுகளை எதிர்காலத் தேதிகளுக்கு மாற்றியமைக்க ஹோட்டல்கள் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் மிகமுக்கிய தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல கலாச்சார நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை (அபுதாபி) (DCT அபுதாபி) வரும் வாரத்தில் நடைபெறவிருந்த கலாச்சார உச்சிமாநாடு “அபுதாபி 2022″ன் ஐந்தாவது பதிப்பை ஒத்திவைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap