துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சி 26வது ஆண்டாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த கண்காட்சி மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் முக்கியமான பொழுதுபோக்கு கண்காட்சியாக உள்ளது.
இந்த கண்காட்சியில் ஈகைத் திருநாள் விடுமுறையை முன்னிட்டு தொடர்ந்து வண்ண மயமான வாண வேடிக்கைகள் நடந்து வருகிறது.
இதனை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். விடுமுறையை முன்னிட்டு மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இந்த கண்காட்சி நடக்கிறது.
குளோபல் வில்லேஜிற்கான டிக்கெட் கட்டணம் முன்பு 15 திர்ஹம்ஸ் ஆக இருந்தது. இந்நிலையில் இப்போது ஆன்லைனில் விற்கப்படும் டிக்கெட் 15 திர்ஹம்ஸ் ஆகவும் குளோபல் வில்லேஜின் வெளியே இருக்கும் டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட்டானது 20 திர்ஹம்ஸ் ஆகவும் உள்ளது