துபாயில் 5G சேவை விரைவில்..!

துபாய் தனது முதல் 5G சேவையை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்நுட்ப ஆணையத்தின் தலைவர் மற்றும் CEO சலேம் அல் உதைனா கூறுகையில்; 5 வது தலைமுறை அதிவேக இன்டர்நெட் சேவை வரும் ஜூன் மாதத்தில் நடுவில் தொடங்கும் என கூறியுள்ளார்.

இந்த 5G சேவையின் வேகமானது சுமார் 1.2 Gbps வரை இருக்கும் என்று தொலைத்தொடர்பு அதிகாரிகளால் கூறப்படுகிறது. மேலும், வளைகுடா நாடுகளில் முதல் 5G சேவை துபையில் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமீரக வாசிகள் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த சேவையை எதிர்நோக்கி உள்ளனர்.

Source: Khaleej Times

Loading...