அமீரகத்தில் முதல் குரங்கம்மை நோய் தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமீரகத்திற்கு மேற்கு ஆபிரிக்காவிலிருந்து வந்த 29 வயது பெண் ஒருவருக்கு இந்த வைரஸ் கண்டறியப்பட்டதாக சுகாதார மற்றும் நோய் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த பெண்ணுக்கு தற்போது தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்று அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது. நோய் தொடர்புத் தடமறிதல் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவதாக அமைச்சகம் குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் குரங்கம்மை வழக்குகள் பதிவாகியபோது செயல்படுத்தப்பட்ட நமது சுகாதார அமைச்சகத்தின் ஆரம்பகால கண்காணிப்பு அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழக்கு கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Everything you need to know about Monkeypox…
How to prevent Monkeypox? #Monkeypox #MOHAP_UAE pic.twitter.com/UfbqZtMieI— وزارة الصحة ووقاية المجتمع – MOHAP UAE (@mohapuae) May 24, 2022
MoHAP உலகளவில் குரங்கம்மை பரவுவதை “கண்காணித்து வருகிறது” மேலும் “உள்ளூர் தொற்றுநோயியல் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது” அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வைரஸ் பரவுவதைத் தடுக்க, நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் சந்தேகத்திற்கிடமான வழக்குகளை குறித்து புகாரளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
வதந்திகளை பரப்பவோ அல்லது பிறரை தவறாக வழிநடத்தவோ வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறவும் அமைச்சகம் குடியிருப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மே 24 நிலவரப்படி, உலக சுகாதார அமைப்பு 250க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் குரங்கம்மை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.