UAE Tamil Web

அமீரகத்திலேயே உருவாக்கப்படும் முதல் Electric Car.. சாதித்துக்காட்டிய சிங்கப்பெண் Alazazi – விரைவில் வெளிவர காத்திருக்கும் DMV300!

முழுவதுமாக நமது அமீரகத்திலேயே தயாரிக்கப்படவிருக்கும் எலக்ட்ரிக் கார்களின் Production பணி விரைவில் துவங்கவுள்ளது என்ற மாபெரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

M Glory Holding Groupன் தலைவரான Dr. Majida Alazazi, அந்த வெகு சிறப்பான நாளுக்காக காத்திருக்கிறார் என்று தான் கூறவேண்டும். இதுகுறித்து அவர் ஊடகங்களிடம் பேசும்போது..

“இந்த எலக்ட்ரிக் காரின் பெயர் Al Damani DMV300, இவற்றை தயாரிப்பதற்கு துபாய் இண்டஸ்ட்ரியல் சிட்டியில் (DIC) ஒரு தற்காலிக தொழிற்சாலையை நிறுவியுள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது” என்றும் அவர் கூறினார்.

“இன்னும் சில நாட்களில் இந்த கார்களின் உற்பத்தியை தொடங்குவோம், மேலும் ஜூன் மாத இறுதிக்குள் எங்கள் தொழிற்சாலையில் இருந்து முதல் Batch கார்கள் வெளிவரும் என்று நம்புகிறோம்,” அமீரகத்தில் நடந்த மின்சார வாகன கண்டுபிடிப்பு உச்சி மாநாட்டின் போது ஊடகங்களிடம் அவர் இதை கூறினார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம், டாக்டர் மஜிதா மற்ற உயர் அதிகாரிகளுடன் சேர்ந்து DICல் அமீரகத்தின் முதல் மின்சார வாகன உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இத்தொழிற்சாலை 2024ம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், DICல் கட்டப்படும் பிரதான தொழிற்சாலையிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு தற்காலிக தொழிற்சாலையில் DMV300 தயாரிக்கப்படும். இந்த எலக்ட்ரிக் கார்கள் மணிக்கு 160 கிமீ வேகத்தை எட்டும் என்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 405 கிமீ-க்கும் மேல் செல்லும் என்றும் அவர் கூறினார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap