சென்னை விமான நிலையத்தில் சுமார் ₹50 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக நஜிருதீன், ராஜா முகமது மற்றும் ஜாஹிர் ஹுசைன் (துபாய்க்கு வரவிருந்தவர்கள்), விஷ்ணுசாகர் (கொழும்புக்கு) மற்றும் அப்சர் அலி (பாங்காக் செல்லவிருந்தவர்) ஆகிய 5 பயணிகள் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிகாரிகள் இந்த ஐந்து பேரை சோதனையிட்டபோது, பயணிகளின் Baggage மற்றும் காலணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு Denominations கொண்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கிடைத்துள்ளது.
துபாய் வரவிருந்த எமிரேட்ஸ் விமானத்தில் புறப்படவிருந்த அந்த மூன்று பேர் உள்பட ஐந்து நபர்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் தற்போது விசாரித்து வருகின்றனர்.
கடத்தப்பட்ட இந்த பணம் ஹவாலா பணமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. துபாய் – சென்னை, மற்றும் துபாய் – திருச்சி மார்கமாக தங்க கடத்தல் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் இந்த வெளிநாட்டு கரன்சி கடத்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.