UAE Tamil Web

ஷார்ஜா: 5 நாட்கள் நீடிக்கும் தள்ளுபடித் திருவிழா : நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடி..!

6-tips-to-stay-safe-while-shopping-during-a-pandemic

ஷார்ஜா எக்ஸ்போ மையத்தில் ஜூன் 2 ஆம் தேதி மிகப்பெரிய தள்ளுபடித் திருவிழா துவங்க இருக்கிறது. ஜூன் 6 ஆம் தேதிவரையில் மொத்தம் 5 நாட்கள் நீடிக்கும் இந்தத் திருவிழாவில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Big Shopper Sale எனப்படும் இந்த தள்ளுபடித் திருவிழாவில் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம். அமீரகத்தில் சில்லறை வர்த்தகத்தை மீண்டும் மேம்படுத்தும் நோக்கத்தோடு உலகளாவிய மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் அழகுசாதன, ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பொருட்கள் விற்பனைக்கு வரவிருக்கின்றன.

மதிப்பான மற்றும் மிகவும் விரும்பப்படும் பொருட்களுக்கான தேவை அதிகரித்துவருவதை சில்லறை வர்த்தகர்கள் இந்த ஷாப்பிங் திருவிழாக்கள் மூலமாக அறிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது. கடந்தாண்டு கொரோனா காரணமாக விற்பனைகள் பாதிக்கப்பட்டாலும் தற்போது நுகர்வோர்கள் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவது இந்தத் தள்ளுபடித் திருவிழாவிற்கு அதிகமான மக்கள் வருவார்கள் என்பதையே காட்டுகிறது.

இந்தத் தள்ளுபடித் திருவிழா காலை 11 மணிமுதல் இரவு 11 மணிவரையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவுக்கட்டணமாக 5 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படும் எனவும் பார்க்கிங் கட்டணங்கள் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6-tips-to-stay-safe-while-shopping-during-a-pandemic
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap