துபாயில் 6 லட்சம் திர்ஹம்ஸை திருடிய 5 பேருக்கு துபாய் குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
துபாயில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 4 பேர் ஒரு தொழிலதிபரின் வீட்டிற்குள் நுழைந்து 6 லட்சம் திர்ஹம்ஸை கொள்ளை அடித்துள்ளனர்.
இதனையடுத்து வீட்டில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலிஸார் கொள்ளைக்காரர்களை கைது செய்தனர்.
மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நால்வரில் மேலும் ஒருவரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றவாளிகள் ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில் மீதமிருந்தவரயும் கைது செய்து விசாரித்த போலிஸார், திருடிய பணத்தை அவர் காரில் மறைத்து வைத்துள்ளார். மேலும் கூட்டாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால் அவரது பங்கான 150,000 திர்ஹம்ஸை தனது நாட்டுக்கு அனுப்பியதாகவும், மீதமுள்ள தொகையை மற்ற 4 பேருக்கு சமமாக விநியோகித்துவிட்டதாகவும் கூறினார்.