UAE Tamil Web

அபுதாபியில் பயங்கர விபத்து: 3 இந்தியர்கள் உட்பட 5 பேர் பலி – உடல்களை இந்தியா அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக இந்திய தூதரகம் தகவல்..!

A-photo-released-by-Abu-Dhabi-Police-_

அபுதாபி: அல் தஃப்ராவின் ஆசாப் பகுதியில் நிகழ்ந்த மோசமான விபத்தில் 3 இந்தியர்கள் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்திருப்பதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது. இறந்தவர்களுள் ஒருவர் அமீரகத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் அரபு தேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக் குறித்து தகவல் அளிக்கப்பட்ட உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறை மீட்புக்குழு படுகாயமடைந்த ஏமிராட்டி இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறது.

உட்புறச் சாலையில் இருந்து மெயின் ரோட்டில் நுழைந்தவுடன் காரானது அதிவேகமாக வந்த கார் ஒன்றினால் மோதப்பட்டிருக்கிறது. இரண்டு காரும் உடனடியாக தீப்பிடித்ததால் விபத்தில் சிக்கியவர்களை மீட்க முடியாமல் போயிருக்கிறது.

சோர்வாக உணர்ந்தால் வாகனம் ஓட்ட வேண்டாம் என காவல்துறை மக்களை அறிவுறுத்தியுள்ளது.

விபத்தில் இறந்த 3 பேருடைய கம்பெனி மற்றும் அவர்களது வீட்டினரைத் தொடர்புகொண்டு விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளதாகவும் இருவருடன் தொடர்ந்து இணைப்பில் உள்ளதாகவும் அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

விபத்து குறித்து அபுதாபி காவல்துறை விசாரித்து வருவதாகவும், இறந்தவர்களின் உடல்களை விரைவாக திருப்பி அனுப்புவதற்கும், இழப்பீடு தொடர்பான பிற சம்பிரதாயங்களை நிறைவு செய்வதற்கும் சாத்தியமான அனைத்து உதவிகளும் தூதரகத்தால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A-photo-released-by-Abu-Dhabi-Police-_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap