UAE Tamil Web

தொழிலாளர்களுக்கு 5 வருடத்திற்கான விசா – துபாய் இளவரசரின் புதிய அறிவிப்பு..!

துபாயில் இயங்கிவரும் சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 5 வருடத்திற்கான விசா வழங்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

மீட்டிங் மற்றும் அவசர தேவைகளுக்காக துபாயிலிருந்து பிற நாடுகளுக்கும் வெளிநாடுகளில் இருந்து துபாய்க்கும் அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய கட்டாயம்கொண்ட ஊழியர்களுக்கு இந்த விசா பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,”துபாயில் அமைந்துள்ள சர்வதேச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஐந்தாண்டு நுழைவு அனுமதியை வழங்கத் தொடங்கியுள்ளோம். பிற நாடுகளில் நடைபெறும் கண்காட்சிகள், கான்ஃபெரன்ஸ், ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க பணியாளர் குழுக்கள் ஆண்டு முழுவதும் எளிதாக சென்று வர வழிவகை செய்வதே எங்களது இலக்கு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

34 Shares
Share via
Copy link