UAE Tamil Web

எதிர்வரும் கோடைக்காலம்.. விமானக் கட்டணம் 80 சதவீதம் வரை உயர வாய்ப்பு – அமீரக விமான சேவை நிறுவனங்கள் அறிவிப்பு

துபாயில் இருந்து, ஐரோப்பா மற்றும் தெற்காசியா முழுவதும் உள்ள பிரபலமான இடங்களுக்கான விமானக் கட்டணம் வரவிருக்கும் வாரங்களில் வழக்கத்தைவிட 80 சதவீதம் உயரக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பயணத் துறை நிர்வாகிகள் கூறியதாவது, “அமீரக பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை இப்போதே முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்படும் தாமதங்கள் அவர்களின் பட்ஜெட்டில் பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என்றும் கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அவர்கள் விரும்பிய தேதிகளில் நேரடி விமானங்களை முன்பதிவு செய்வதில் ஏமாற்றத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறியுள்ளனர்.

அமீரக புளூட்டோ டிராவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அவினாஷ் அட்னானி, பயணிகள் தங்கள் இருக்கைகளை சீக்கிரம் முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினார், ஏனெனில் ஒவ்வொரு நாளும் தேவை அதிகரித்து வருகிறது என்றார் அவர்.

கடந்த திங்களன்று, துபாயின் முதன்மை விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ், தங்கள் விடுமுறை நாட்களைத் திட்டமிடாத அல்லது பயண ஏற்பாடுகளைச் செய்யாத வாடிக்கையாளர்களை இப்போதே முன்பதிவு செய்ய கோரிக்கைவிடுத்துள்ளது.

கோடை விடுமுறை நெருங்கி வருவதால், தினசரி முன்பதிவு அளவுகள் அதிகரித்து வருவதால், தங்களுக்கு விருப்பமான தேதிகள் மற்றும் விமானங்களில் பயணிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு எமிரேட்ஸ் கேட்டுக்கொண்டது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap