உலகின் அழகான 50 நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்த துபாய்..!

Flight Network unveils top 50 of beautiful cities

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் உலகின் அழகான 50 நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

“ஃபிளைட் நெட்வொர்க்” கனடாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாகும். கனேடியருக்கு சொந்தமான மிகப்பெரிய ஆன்லைன் பயண முகவர் நிறுவனங்களில் ஒன்றான இது உலகின் அழகான 50 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரம் 29வது இடத்தை பிடித்துள்ளது.

இதில் முதல் இடத்தில் பாரிஸ் நகரம் உள்ளது. அதனை தொடர்ந்து, இரண்டாவது, மூன்றாவது இடங்கள் முறையே நியூயார்க், லண்டன் நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்த பட்டியலில் இந்தியாவின் ஜெய்ப்பூர் 48 இடத்தை பிடித்துள்ளது.

நகரங்களின் முழு பட்டியல்:

1. பாரிஸ், பிரான்ஸ்

2. நியூயார்க், அமெரிக்கா

3. லண்டன், இங்கிலாந்து

4. வெனிஸ், இத்தாலி

5. வான்கூவர், கனடா

6. பார்சிலோனா, ஸ்பெயின்

7. கேப் டவுன், தென்னாப்பிரிக்கா

8. சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா

9. சிட்னி, ஆஸ்திரேலியா

10. ரோம், இத்தாலி

11. சிங்கப்பூர், சிங்கப்பூர்

12. லிஸ்பன், போர்ச்சுகல்

13. ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து

14. ப்ராக், செக் குடியரசு

15. ரியோ டி ஜெனிரோ, பிரேசில்

16. புடாபெஸ்ட், ஹங்கேரி

17. இஸ்தான்புல், துருக்கி

18. டோக்கியோ, ஜப்பான்

19. வியன்னா, இத்தாலி

20. புவெனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா

21. டொராண்டோ, கனடா

22. சான் டியாகோ, அமெரிக்கா

23. கியூபெக் நகரம், கனடா

24. ஹாங்காங், சீனா

25. சிகாகோ, அமெரிக்கா

26. ப்ருகஸ், பெல்ஜியம்

27. மாட்ரிட், ஸ்பெயின்

28. ஹவானா, கியூபா

29. துபாய், UAE

30. ஜெருசலேம், இஸ்ரேல்

31. எடின்பர்க், ஸ்காட்லாந்து

32. குயிடோ, ஈக்வடார்

33. சூரிச், சுவிட்சர்லாந்து

33. கஸ்கோ, பெரு

35. செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா

36. பெர்லின், ஜெர்மனி

37. ஹனோய், வியட்நாம்

38. குயின்ஸ்டவுன், நியூசிலாந்து

39. சான் மிகுவல் டி அலெண்டே, மெக்சிகோ

40. சியோல், தென் கொரியா

41. டுப்ரோவ்னிக், குரோஷியா

42. சான் செபாஸ்டியன், ஸ்பெயின்

43. பாங்காக், தாய்லாந்து

44. கார்டகெனா, கொலம்பியா

45. டப்ளின், அயர்லாந்து

46. ​​மராகேச், மொராக்கோ

47. பெர்கன், நார்வே

48. ஜெய்ப்பூர், இந்தியா

49. பெய்ஜிங், சீனா

50. ஏதென்ஸ், கிரீஸ்

Loading...