UAE Tamil Web

ஆகஸ்டு 2 வரையில் இந்தியாலிருந்து அமீரகத்திற்கு விமானங்கள் கிடையாது – எதிஹாட் அறிவிப்பு..!

Etihad_Air_

அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எதிஹாட் ஏர்வேஸ் இந்தியாவிலிருந்து அமீரகம் வரும் பயணிகள் விமானங்களுக்கான தடை குறைந்தபட்சம் ஆகஸ்ட் 2 ஆம் தேதிவரையில் தொடரும் என அறிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள் இந்த அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அமீரக அரசு அதிகாரிகள் உத்தரவிடும் பட்சத்தில் இந்த தடை மேலும் நீட்டிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள், கோல்டன் விசா வைத்திருப்போருக்கு மட்டும் இந்தத் தடையில் விலக்கு உண்டு எனவும் அவர்கள் தங்களது பயண நேரத்திற்கு முன்னதான 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் கொரோனா சான்றிதழை வைத்திருக்கவேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்திற்கான இடைக்காலத்தடை ஜூலை 31 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பை எதிஹாட் வெளியிட்டிருக்கிறது.

Etihad_Air_
17 Shares
Share via
Copy link