இந்தியா, பாகிஸ்தான் உட்பட அமீரக அரசால் பயணத்தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குறிப்பிட்ட 8 வகையான பயணிகள் அமீரகம் வருவதற்கு தற்போது அமீரக பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும் இந்த நாடுகளில் இருந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை மறு அறிவிப்பு வரும் வரையில் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 பிரிவினர்
- அமீரக குடிமக்கள் மற்றும் அவர்களின் முதல் நிலை உறவினர்கள்
- அமீரகம் மற்றும் அதற்குப் பொருந்தக்கூடிய நாடுகளின் ராஜாங்க பணியாளர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள்.
- அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் ; முன் அனுமதி பெறுதல் அவசியம்.
- துபாய் எக்ஸ்போ 2020 சர்வதேச பங்கேற்பாளர்கள் மற்றும் கண்காட்சியாளர்கள்; மற்றும் அதன் அமைப்பாளரால் ஸ்பான்சர் செய்யப்படும் பணியாளர்கள்.
- அமீரக கோல்டன் அல்லது சில்வர் ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள்.
- வெளிநாட்டு நிறுவனங்களின் சரக்கு மற்றும் போக்குவரத்து விமானங்களின் குழுக்கள்.
- துறைமுகங்கள், எல்லைகள் மற்றும் சுதந்திர மண்டலங்களின் (Free Zones) பாதுகாப்புக்கான பொது அதிகார சபையிடமிருந்தும், சம்பந்தப்பட்ட எமிரேட்ஸின் அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழுக்களின் தலைவர்களிடமிருந்தும் ஒப்புதல் பெற்ற தொழிலதிபர்கள் (இருபாலரும்).
- அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) வெளியிட்ட வகைப்பாட்டின் படி முக்கிய செயல்பாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள்.
பயண விதிமுறைகள்
மேற்கண்ட பிரிவுகளில் அமீரகம் வரும் நபர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- பயண நேரத்திற்கு முன்னதான 48 மணிநேரத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் எடுக்கப்பட்ட நெகட்டிவ் PCR சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும். அதில் கட்டாயமாக QR Code இருத்தல் வேண்டும்.
- வருகையின்போது PCR பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும் 4 மற்றும் 8 வது நாளில் மீண்டும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும்.
- 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- கண்காணிப்பு சாதனத்தை அணிந்திருக்க வேண்டும்.
