UAE Tamil Web

துபாயில் வழங்கப்பட்ட விசாவை வைத்திருப்பவர்களும் அபுதாபிக்கு வரலாம் – எதிஹாட் அறிவிப்பு..!

Stock-India-airport-Indigo

துபாயில் வழங்கப்பட்ட ரெசிடென்சி விசாவை வைத்திருக்கும் இந்தியர்கள் அபுதாபிக்கு வரலாம் என அபுதாபியை மையமாகக் கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்துப் பேசுகையில் “துபாயில் வழங்கப்பட்ட ரெசிடென்சி விசாவை வைத்திருப்பவர்களும் அபுதாபிக்கு வருவதில் தடை ஏதும் இல்லை” எனக் குறிப்பிட்டார்.

முன்னதாக சனிக்கிழமை அன்று ஏர்இந்தியா நிறுவனம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில் அந்தந்த எமிரேட்ஸ் வாசிகள் அவர்களுடைய எமிரேட்டிற்குத் தான் வரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அமீரக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்ட தகவலின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எதிஹாட் நிறுவனம் துபாய் குடியிருப்பாளர்கள் அபுதாபிக்கு திரும்பலாம் என அறிவித்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் அபுதாபி வரும் பயணிகள் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என எதிஹாட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தினார்.

  • பயண நேரத்திற்கு முன்னதான 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா PCR பரிசோதனை சான்றிதழ். (12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.)
  • பயணத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ரேபிட் PCR பரிசோதனை சான்றிதழ்.
  • அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றுக் கொண்டதற்கான சான்றிதழ்.
  • அமீரக அடையாளம் மற்றும் குடியிருப்புக்கான பெடரல் ஆணையத்தின் (ICA) ஒப்புதல்.
  • அபுதாபி திரும்பும் பயணிகள் தங்களது வீட்டிலேயே 12 நாட்கள் குவாரண்டைன் செய்து கொள்ள வேண்டும்.
  • விமான நிலையத்தின் இமிக்ரேஷன் பணிகள் முடிவடைந்தவுடன் கொடுக்கப்படும் கைப்பைட்டையை தங்களது குவாரண்டைன் காலத்தில் பயணிகள் அணிந்திருக்க வேண்டும்.
  • அதேபோல அபுதாபி வந்திறங்கிய நாளிலிருந்து 6 மற்றும் 11வது நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
Stock-India-airport-Indigo
8 Shares
Share via
Copy link