வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அமீரக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.! தேர்வுகள் ஒத்திவைப்பு.!

school bus

கடந்த வார இறுதியில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட சேதங்களால் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல பள்ளிகள் இன்று (Janauary 12 2020) மூடப்பட்டுள்ளன. மேலும் சில பள்ளிகள், நிலையற்ற வானிலை காரணமாக தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன.

GEMS Our Own Indian School-ன், அல் குஸ் (Al Quoz), பெற்றோர்களுக்கு ஒரு சுற்றறிக்கையில் கூறியதாவது, “ஜனவரி 12 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்ட பத்தாம் வகுப்பு கணிதத்திற்கான (அடிப்படை மற்றும் தரநிலை) கேஸ் (CASE) தேர்வு வரும் ஜனவரி 19 க்கு ஒத்திவைக்கப்படும்.” என்றுள்ளார்.

இதேபோன்று RAK இல் உள்ள பாகிஸ்தான் மேல்நிலைப்பள்ளி, பெற்றோர்களுக்கு ஒரு பேஸ்புக் பதிவில், “மோசமான வானிலை காரணமாக, பள்ளி இன்று, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) மூடப்படும். கூடுதலாக, நாளைய (January 13 2020) (போர்டு வகுப்புகள்) கிராஷ் டெஸ்ட்டிற்கான (CRASH TEST) தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.” என்று அறிவித்துள்ளது.

மேலும் மழையினால் ஏற்பட்ட சேதங்களை சுத்தம் செய்வதற்காகவும், வரவிருக்கும் மழையிலிருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களைப் பாதுகாப்பதற்காகவும் சில பள்ளிகள் இன்று மூடப்படும். அதுமட்டுமின்றி அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (கே.எச்.டி.ஏ) The Knowledge and Human Development Authority (KHDA), துபாய் பள்ளிகளை இதுபோன்ற சூழ்நிலைகளில் திறக்கலாமா அல்லது மூடப்பட வேண்டுமா என்று சுயமாக முடிவு செய்ய அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து துபாய் பள்ளி தங்கள் பேஸ்புக் பக்கத்தில் “துரதிர்ஷ்டவசமாக, எங்கள் வசதிகள் குழுவின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், எங்கள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அல் கைலில் உள்ள GEMS வெலிங்டன் அகாடமி, இன்று, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12 2020) மூடப்படும். மேலும், எங்கள் வசதிகள் மற்றும் துப்புரவு குழுக்கள் பள்ளிக்கு உள்ளேயும் மற்றும் எங்கள் சேவை சாலையிலும் (service roads) எந்தவொரு வெள்ளநீரையும் அகற்ற தொடர்ந்து செயல்படும். பள்ளி திங்களன்று மீண்டும் திறக்கப்படும் என்று நாங்கள் மிகவும் நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம்.” என்று  தெரிவித்துள்ளது.

இதேபோல், துபாயில் உள்ள அரபு யூனிட்டி பள்ளி (Arab Unity School), “பலத்த மழையின் பின்னர் எங்கள் பள்ளியில் ஏற்பட்ட சேதம் காரணமாக, இன்று மாணவர்களுக்கு பள்ளி இருக்காது” என்று பதிவிட்டுள்ளது. சென்ற வாரம் அமீரகம் கடும் வெள்ளத்தை எதிர்கொண்டதால், ராஸ் அல் கைமாவில் உள்ள பள்ளிகளும் இன்று மூடப்பட்டதைப் பற்றி பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...