UAE Tamil Web

அனல்பறக்கும் டிக்கெட் விற்பனை.. “3 மில்லியன் பயணிகளை வரவேற்க தயாராக உள்ளோம்” – சாதனை படைக்கும் Fly Dubai!

துபாயை தளமாகக் கொண்டு செயல்படும் fly dubai விமான சேவை நிறுவனம், மக்களின் பயணத்திற்கான தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து, தங்கள் “கோடை கால சாதனையை முறியடிக்க” தயாராகி வருவதாகக் கூறியுள்ளது.

“விமான வரலாற்றில் மிகவும் பரபரப்பான கோடை காலமாக இருக்கும் இந்த 2022ல்” சுமார் மூன்று மில்லியன் பயணிகளை வரவேற்க Fly Dubai தயாராகி வருகிறது.

“இந்த கோடை காலத்தில், Fly Dubai சேவையாற்றும் 102 இடங்களின் நெட்வொர்க்கில் மாதத்திற்கு சராசரியாக 8,500 departures திட்டமிடப்பட்டுள்ளன. இது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை “மீறுகிறது” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கள் பயணிகளின் சுமூகமான பயணத்தை உறுதி செய்வதற்காக Fly Dubai ஒரு பயண ஆலோசனையை வழங்கியுள்ளது, அவர் பினருமாறு…

முன்னதாகவும் மற்றும் ஆன்லைனில் முன்பதிவு செய்யவும் வாடிக்கையாளர்கள் நினைவூட்டப்படுகிறார்கள்.

பயணிகள் தங்கள் விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விமானம் புறப்படும் நேரத்திற்கு 20 நிமிடங்களுக்கு முன் போர்டிங் கேட் மூடப்படும்.

விமானம் புறப்படும் நேரத்திற்கு 48 மணிநேரம் முதல் 90 நிமிடங்கள் வரை ஆன்லைன் செக்-இன் திறந்திருக்கும்.

பயணிகள் பயணம் செய்வதற்கு முன், தங்களுடைய பேக்கேஜ் அலவன்ஸைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பயணிகள் தங்கள் முழு பயணத்திற்கான விதிமுறைகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதையும், அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதையும் உறுதிசெய்ய வேண்டும்.

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை flydubai இன் நெட்வொர்க்கில் மாதத்திற்கு சராசரியாக 8,500 புறப்பாடுகள் (Departures) திட்டமிடப்பட்டுள்ளன. 102 இடங்களின் நெட்வொர்க்கில் மூன்று மில்லியன் பயணிகள் வரை விமான சேவையுடன் பறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap