துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வடக்கு ஓடுபாதை மூடப்படுவதால் சுமார் 1,000 விமானங்கள் துபாய் வேர்ல்ட் சென்ட்ரலுக்கு (DWC) விமான நிலையத்திற்கும் ஷார்ஜா விமான் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்படும் என்று துபாய் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் கிரிஃபித்ஸ் தெரிவித்திருந்தார்.
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளில் ஒரு ஓடுபாதையை மே முதல் ஜூன் மாதம் வரை மூடப்பட உள்ளது.
இந்த நிலையில் FLY DUBAI நிறுவனத்தின் விமானங்கள், துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் (DWC) விமான நிலையத்தின் டெட்ட்மினர் 2 மற்றும் 3இல் தரையிரக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.