அமீரகத்தின் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான Fly Dubai மற்றும் வேறு சில விமான சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கத்தார் நாட்டில் நடைபெறவிருக்கும் FIFA உலகக் கோப்பையின் போது தங்கள் விமான சேவைகளை அந்நாட்டிற்கு அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கத்தாரின் தேசிய விமான சேவை நிறுவனமான கத்தார் ஏர்வேஸ், ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்களை 24 மணி நேரமும் தோஹாவுக்கு அழைத்துச் செல்வதற்காக FlyDubai, Kuwait Airways, Oman Air Saudiaவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
கத்தார் ஏர்வேஸ் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, Fly Dubai துபாயிலிருந்து ஒரு நாளைக்கு 60 விமானங்களை இயக்கும் என்றும், குவைத் ஏர்வேஸ், ஓமன் ஏர் மற்றும் Saudia ஆகியவை முறையே 20, 48 மற்றும் 40 விமானங்களை இயக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
FIFA போட்டிகளின்போது அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்படுவதால் ரசிகர்கள் காலையில் கத்தாருக்கு வந்து மாலையில் தாயகம் புறப்படலாம். அவர்கள் ஹோட்டல் அறைகளை புக் செய்ய தேவையிருக்காது, மேலும் FIFA போட்டிகளுக்கான டிக்கெட் உள்ள பயணிகள் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக விளையாட்டு அரங்கிற்கு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மே மாதம் 360 டிஹர்மில் தொடங்கிய One Way டிக்கெட்டின் விலை (எகானமி வகுப்பு) நவம்பர் 20 அன்று 7,110 டிஹர் மாக உயர்ந்துள்ளது என்று ஏர்லைன்ஸ்கள் அளிக்கும் தரவுகள் கூறுகின்றன.