UAE Tamil Web

கோவையிலிருந்து துபாய்க்கு விரைவில் நேரடி விமான சேவை வழங்கும் FLY DUBAI

கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமானத்தை இயக்குவது தொடர்பான, கோவையைச் சேர்ந்த அமைப்பின் கோரிக்கையை FLY DUBAI நிறுவனம் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளது.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 90 நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அது போன்று கோவையிலிருந்து துபாய்க்கு நேரடி விமானத்தை இயக்குமாறு, பல்வேறு விமான நிறுவனங்களுக்கும் கோவையைச் சேந்த அமைப்பு கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்த அமைப்பின் தலைவர், துபாய்க்கு சென்று FLY DUBAI நிறுவனத்தின் தலைவர் காயித்-ஐ சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையம் ஆண்டுக்கு 30 லட்சம் பயணிகளையும், 11 ஆயிரம் டன் சரக்குகளையும் மேற்கொள்கிறது.

தற்போது கோவையிலிருந்து ஷார்ஜா, சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. கோவையிலிருந்து துபாய்க்கு நேரடி விமானம் இயக்கினால், இரு தரப்புக்கும் பெரும் பயன் கிடைக்கும் என்று அமைப்பின் கூறியுள்ளார்.

இதற்கு FLY DUBAI அதிகாரிகளும் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமானம் இயக்க வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap