UAE Tamil Web

உலகின் முதல் முறையாக துபாயில் ‘பறக்கும் படகு’ அறிமுகம்..!

ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் பறக்கும் படகு துபாயில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

சுவிட்சர்லாந்து, துபாய் ஆகிய நாட்டு தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் அமீரகத்தின் முயற்சியில், தி ஜெட் (THE JET) என்ற பெயர் கொண்ட பறக்கும் படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் சொகுசு படகு போன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படகில் 8 முதல் 12 பேர் வரை பயணிக்கலாம். இதில் இரண்டு எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் எரிசக்தியால் இயங்கும் இந்த படகு விரைவில் துபாய் கடல் பகுதியில் காண முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த படகு இயங்கும்போது சத்தம் வருவது இல்லை. மேலும் தண்ணீருக்கு 80 செ.மீ உயரத்திற்கு மேல் பறந்து செல்லும். ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்குவதால் இதில் இருந்து புகைகள் வெளியேறாது.வ்எனவே இந்த படகு சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும் என அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பறக்கும் படகு மணிக்கு 75 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. அடுத்த ஆண்டு துபாய் கடல் பகுதிகளில் இந்த ஜெட் படகு பறந்து செல்வதை அனைவரும் கண்டு ரசிகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap