UAE Tamil Web

துபாய் EXPO-வில் தமிழர் கண்டுபிடித்த “பறக்கும் மின்சார டாக்சி”

துபாய் EXPO 2020-இல் உள்ள இந்தியா அரங்கில் தற்போது எதிர்காலத்தை விளக்கும் பறக்கும் மின்சார டாக்சி ஒன்று பார்வையாளர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ePlane என்ற நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இங்கு உலகின் மிகச் சிறிய பறக்கும் மின்சார டாக்சி கண்டுப்பிடிகப்பட்டுள்ளது.

e200 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் டாக்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ePlane நிறுவனம், இந்தியாவில் பயணம் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக இதனை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு எடுத்தது செல்ல உள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி விண்வெளி பொறியியல் துறை பேராசிரியர் சத்தியநாராயணன் சக்கரவர்த்தி சக்ரவர்த்தி தெரிவிக்கையில், “இதில் இயங்குவதற்கு 8 இறக்கைகள் உள்ளன, இதில் இருவர் பயணிக்கலாம், இதுவே இந்தியாவின் முதல் பறக்கும் மின்சார டாக்சி விமானமாகும் என்று தெரிவித்துள்ளார்.

ePlane நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒன்றன பிரஞ்சல் மேத்தா கூறுகையில், “நகரங்களுக்கு பாதுகாப்பான, அமைதியான மற்றும் மாசு இல்லாத போக்குவரத்து தேவை. அதுமட்டுமின்றி சந்தைகளுக்கு மலிவான, அதிக மைலேஜ் மற்றும் விரைவாக சான்றளிக்கக்கூடிய தயாரிப்புகள் தேவை. அது போன்று நுகர்வோர்கள் எளிதாக அணுகக்கூடிய தேவைக்கேற்ற பயணம் தேவை. இது மக்கள் 10 மடங்கு வேகமாக பயணிக்க உதவுவதோடு கணிசமான நேரத்தை மிச்சப்படுத்தும்” என்றார்.

சமீபத்தில் முதற்கட்ட சோதனை செய்யப்பட்ட இந்த e200 பறக்கும் டாக்ஸியின் முதல் சரக்கு விமானம் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் தயாராக இருக்கும் என்றும், பயணிகள் விமானம் 2024 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறிய மேத்தா என்று தெரிவித்தார்.

இது குறித்து ePlane நிறுவனம் வெளியிட்டுள்ளதவது, இந்த e200 பறக்கும் டாக்சியானது 1500 அடி உயரத்தில் பறக்கும் என்றும் 200 கி.மீட்டர்  தூரத்திற்கு பறக்கும் திறன் வாய்ந்ததாக இருக்கும் என்றும் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்ல கூடிய திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap