UAE Tamil Web

அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு பயணிக்க உள்ளீர்களா.? கோவிட்-19 தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு..

india

இந்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி கோவிட் -19 RT-PCR நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் இந்தியாவுக்கு செல்லும் மற்றும் நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு கோரும் பயணிகள், இப்போது விமான நிலையத்தை அடைந்தவுடன் RT-PCR சோதனை செய்து கொள்ளலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

சர்வதேச வருகைக்கான புதிய வழிகாட்டுதல்களை இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது. பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடங்கும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT-PCR சோதனையின் கோவிட் -19 நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து பயணிகளும் சுய-அறிவிப்பு படிவத்தை ஆன்லைன் போர்ட்டலில் (www.newdelhiairport.in) திட்டமிடப்பட்ட பயணத்திற்கு குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது அந்தந்த சுகாதார கவுன்டர்களுக்கு வந்த பின் நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என்று வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. நெகட்டிவ் RT-PCR சோதனை அறிக்கையை சமர்ப்பிப்பதன் மூலம் பயணிகள் நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறலாம்.

பயணத்தை மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் இந்த சோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும். சோதனை அறிக்கையை பரிசீலனைக்காக போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும். ஒவ்வொரு பயணிகளும் அறிக்கையின் நம்பகத்தன்மை தொடர்பாக ஒரு உறுதி ஆவணத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். RT-PCR நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் வரும் சர்வதேச பயணிகள் மற்றும் நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெற விரும்பினால், விமான நிலையங்களில் RT-PCR சோதனை செய்து கொளவதற்கான வசதியையும் பெறலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெற விரும்பும் பயணிகள், அவர்களின் ஆரோக்கியத்தை சுயமாக கண்காணிக்க வேண்டும் மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றனர் அதிகாரிகள்.

எனினும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் வரும் சர்வதேச பயணிகள் மற்றும் விமான நிலையத்தில் PCR சோதனையை தேர்வு செய்யாமால் இருந்தாலோ(சோதனை வசதி இருந்தும்) அல்லது பரிசோதனை வசதி இல்லாத விமான நிலையத்திற்கு வந்தாலோ 7 நாட்கள் ’நிறுவன தனிமைப்படுத்தல் மற்றும் 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு கட்டாயம் உட்படுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

விமானம் ஏறுவதற்கு முன்..

  • சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் / ஏஜென்சிகளிடமிருந்து நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியலை பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • உங்கள் மொபைலில் ஆரோக்ய சேது(Aarogya Setu) பயன்பாட்டை பதிவிறக்கம் சேது கொள்ள வேண்டும்.
  • பயண நேரத்தில், முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பராமரிப்பது போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

பயணத்தின் போது:

  • போர்ட்டலில் சுய அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்யாத பயணிகள் விமானத்தில் நகலில் அதை நிரப்ப வேண்டும், அதன் நகல் விமான நிலையத்தில் உள்ள சுகாதார மற்றும் குடிவரவு அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.
  • பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உட்பட கோவிட்-19 பற்றிய பொருத்தமான அறிவிப்புகள் விமான நிலையங்களிலும் ,விமானங்களிலும் மற்றும் போக்குவரத்தின் போதும் வெளியிடப்படும்.
  • விமானத்தில் செல்லும்போது, முககவசம் அணிவது, சுற்றுச்சூழல் சுகாதாரம், சுவாச சுகாதாரம், கை சுகாதாரம் போன்ற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.

உரிய இடத்திற்கு வந்து சேர்ந்ததும்..

  • சமூக இடைவெளியை கடை பிடித்து உடல் தூரத்தை உறுதிசெய்து டிபோர்டிங் செய்ய வேண்டும்
  • அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்தில் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஆன்லைனில் நிரப்பப்பட்ட சுய அறிவிப்பு படிவம் அலல்து உடல் சுய அறிவிப்பு படிவத்தின் நகலை விமான நிலைய சுகாதார ஊழியர்களிடம் காட்ட வேண்டும்.
  • ஸ்கிரீனிங்கின் போது அறிகுறிகள் காணப்படும் பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார நெறிமுறைப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். ஸ்கிரீனிங்கிற்கு பிறகு, ஏற்கனவே RT-PCR நெகட்டிவ் சான்றிதழ்கள் வைத்திருக்கும் பயணிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, 14 நாட்களுக்கு அவர்களின் உடல்நலம் குறித்து சுய கண்காணிப்பை மேற்கொள்ளலாம்.

இத்தகைய பயணிகளுக்கு தேசிய மற்றும் மாநில அளவிலான கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் அந்தந்த கால் சென்டர் எண்களின் பட்டியல் வழங்கப்படும். இதனால் வீட்டு தனிமை அல்லது சுய கண்காணிப்பின் போது எந்த நேரத்திலும் அறிகுறிகள் தோன்றினால் கால் சென்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மீதமுள்ள பயணிகள் பொருத்தமான நிறுவன தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். ஐ.சி.எம்.ஆர் நெறிமுறையின்படி அந்தந்த அரசால் கட்டாயமாக 7 நாட்கள் ’நிறுவன தனிமைப்படுத்தல் மற்றும் 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த ஏற்பாடு செய்யப்படுவார்கள்.