UAE Tamil Web

புதிய சுற்றுச்சூழல் கொள்கை அம்சங்கள் குறித்து அமீரகம் விளக்கம்.! உணவுப் பாதுகாப்பு, காற்றின் தரத்தை மேம்படுத்த முக்கியத்துவம்

policy

புதிதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் கொள்கையின் விவரங்களை அமீரகம் இன்று அறிவித்துள்ளது. இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காற்றின் தரம் மற்றும் நிலையான விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவை அடங்கும்.

- Advertisment -

கடந்த மாதம் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் துவக்கப்பட்ட இந்த புதிய கொள்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பை நாட்டின் முன்னுரிமைகளில் ஒன்றாக வைக்கிறது. புதிய சுற்றுச்சூழல் கொள்கையானது காலநிலை நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காற்றின் தரம், உணவு பாதுகாப்பு மற்றும் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது.

மேலும் இது நிலையான உள்ளூர் பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியையும், ரசாயன மற்றும் பொது கழிவுகளை பாதுகாப்பாக நிர்வகிப்பதையும் உள்ளடக்கியது. புதிய கொள்கை பற்றி பேசியுள்ள அமீரக சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் அப்துல்லா அல் நுவைமி, சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை முன்னேற்றுவதையும், அனைத்து துறைகளிலும் நிலைத்தன்மையை அடைவதற்கான முயற்சிகளுக்கு பங்களிப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம்.

குறிப்பாக, சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மற்றும் சுற்றுச்சூழல் வளங்கள் மற்றும் சேவைகளின் நீடித்த தன்மை ஆகியவற்றில் புதிய கொள்கை கவனம் செலுத்துகிறது என்று விளக்கம் அளித்துள்ளார். முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும் போது கடந்த சில ஆண்டுகளில், நாட்டில் காற்றின் தர குறிகாட்டிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளன என்றார்.

இன்னும் 20 ஆண்டுகளுக்குள் கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் கிரவுண்ட் ஓசோன் ஆகிய நான்கு முக்கிய மாசுபடுத்திகளில் நிகர நேர்மறையான தாக்கத்தை அடைய நாடு இலக்கு வைத்துள்ளதாகவும் கூறினார்.