துபாயில் உலகக் கோப்பை குதிரை பந்தயம் நடைபெற உள்ளதால் இன்று பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு வரை மெய்டன் சாலையில் போக்குவரத்து நெர்சல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ட்வீட்டரில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான (RTA) வாகன ஓட்டிகளை மாற்று சாலைகளைப் பயன்படுத்தவும், சரியான நேரத்தில் தங்கள் இலக்கை அடைய தங்கள் பயணத்தைத் மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளது.
துபாய் உலகக் கோப்பையின் போது போக்குவரத்தின் சீரான ஓட்டத்தை எளிதாக்க, RTA விரிவான போக்குவரத்துத் திட்டத்தையும் குறிப்பிட்டுள்ளது.
இதில் பார்வையாளர்களுக்காக 11,400 பார்க்கிங் இடங்கள் மற்றும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல 4,500 டாக்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
துபாய் உலகக் கோப்பை உலகின் மிகப்பெரிய குதிரைப் பந்தயப் போட்டிகளில் ஒன்றாகும். இந்தப் போட்டியில் வெற்றிபவர்களுக்கு $30.5 மில்லியன் பரிசுத் தொகையை வழங்கப்பட உள்ளது.