UAE Tamil Web

துபாயில் வசிக்கும் இந்தியர்களின் கவனத்திற்கு

துபாயில் உள்ள இந்தியர்களுக்கான (Document Attestation Center) முன்னதாக சிறிய இடத்தில் இயங்கி வந்தது. இதனால கூட்ட நெறிசல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

முன்னதாக இந்த சேவை மையம் துபாய் ஹூத் மேத்தாவில் இருக்கும் பிசினஸ் ஏட்ரியம் கட்டிடத்தில் சிறிய அறைகளில் ​​இயங்கி வந்தது. இந்நிலையில் தற்போது வைட்டிங் ஹால் வசதியுடன் பெரிய மையம் துபாயில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது பிப்ரவரி 15 முதல், ஹூத் மேத்தா, பிஸினஸ் ஏட்டிரியம் கட்டிடத்தின் முதல் மாடியில், பெரிய அறைகளான 102, 103 மற்றும் 104 -இல் Document Attestation Center இயங்க உள்ளதாக துபாயில் இந்திய துணை தூதரம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய துணை தூதரக அதிகாரி சாஹில் கூறுவதாவது “இந்த மையத்தில் பவர் ஆஃப் அட்டர்னி பதிவு, கல்வி ஆவணங்களை சான்றளித்தல், பட்டங்கள், உயில் பதிவு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.

போதிய இடவசதி இல்லாததால் முந்தைய மையத்தில் கூட்ட நெறிசல் ஏற்பட்டது. தற்போது அமைக்கப்பட்டிருக்கும் புதிய மையமானது, பெரிய வைட்டிங் ஹாலுடன் பெரிய அலுவலகமாக உள்ளது என்று இந்திய துணை தூதரக அதிகாரி சாஹில் தெரிவித்தார்.

மையம் இயங்கும் நேரம்:

திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை.

சனிக்கிழமை: காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை.

மேலும்,  pbsk.dubai@mena.gov.in, attestation.dubai@mea.gov.in, passport.dubai@mea.gov.in ஆகிய ஈ-மெயில் ஐடிகளுக்கு விபரங்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 Shares
Share via
Copy link