ஷார்ஜாவில் 1,400-க்கும் மேற்பட்ட புதிய வாகன பார்கிங், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கட்டண பார்கிங்காக மாற்றப்பட்டுள்ளன.
இந்த புதிய 1,400 பார்கிங் வசதிகளில் டச் டெக்னாலஜியான ஸ்மார்ட் பேமெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளன என்று பொது வாகன நிறுத்துமிடத் துறையின் இயக்குநர் ஹமத் அல் கெய்த் தெரிவித்தார்.
மேலும் வாகன ஓட்டிகள் பணம் செலுத்துவதற்கு நாணயங்களை பயன்படுத்தலாம். பார்க்கிங் கட்டணத்தை ஆப் மூலமாகவோ அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவோ செலுத்தலாம்.
எமிரேட்ஸில் கட்டண வாகன நிறுத்துமிடங்களின் எண்ணிக்கை 55,300 ஆக உயர்ந்துள்ளது மேலும் 1,210-க்கும் அதிகமான ஸ்மார்ட் பார்க்கிங் மீட்டர்கள் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன என்று அல் கெய்ட் கூறினார்.
ஷார்ஜா முனிசிபாலிட்டியின் வாகன நிறுத்துமிடங்களில் எந்த விதி மீறலும் இல்லை என்பதை உறுதிசெய்யும் வகையில் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக கெய்ட் தெரிவித்தார்.