UAE Tamil Web

அமீரகத்தில் தொழில் செய்யும் முதலாளிகளின் கவனத்திற்கு..!

வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதிக்குப் பின் பழைய ஒப்பந்தத்திற்கான ஊழியர்களின் வார இறுதி நாட்களை தனியார் நிறுவனங்கள் மாற்ற தேவையில்லை என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏடிஜி சட்ட நிர்வாகி முகமது அல் தஹ்பாஷி கூறுகையில், “ஊழியர்களுக்கான வேலை ஒப்பந்தங்களில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வார இறுதி நாட்களைக் கட்டாயம் குறிப்பிட்டுருக்க வேண்டும்.ஒப்பந்தங்களில் விடுமுறை நாட்களைக் குறிப்பிட்டால், அரசு கொண்டுந்துள்ள புதிய திங்கள் முதல் வெள்ளி வேலை நாட்களுக்கு பிறகு ஊழியர்களின் வார இறுதி நாட்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் அவை திருத்தப்பட வேண்டும். பிப்ரவரி 2 முதல் நடைமுறைக்கு வரும் புதிய தொழிலாளர் சட்டத்தால் வாரந்தோறும் குறைந்தபட்சம் ஒரு நாள் விடுமுறை வழங்க தனியார் துறைக்கு உரிமை உள்ளது. பகுதி நேர வேலை, தற்காலிக வேலை உள்ளிட்ட பல வேலை சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், தினசரி மற்றும் வாராந்திர வேலை நேரம் குறித்த விவரங்களை தனியார் நிறுவனங்கள் தெளிவாக குறிப்பிட வேண்டும்” என்று தஹ்பாஷி கூறினார்.

புதிய தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 17இன் படி, ஊழியர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 8 மணிநேரம் அல்லது வாரத்தில் 48 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி வேலை நேரம் தீர்மானிக்கப்பட வேண்டும். அதிக நேரம் பணியாளர்களை வேலை செய்ய முதலாளிகள் வற்புறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேர இடைவெளி இன்றி தொடர்ந்து வேலை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap