UAE Tamil Web

அமீரகத்திலிருந்து இந்தியா செல்லும் பயணிகளின் கவனத்திற்கு..!

இந்தியாவிற்கு பயணிக்கும் சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MOHFW) வெளியிட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 14 ஆம் தேதிக்குப் பின் அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் 7 நாள் தனிமைப்படுத்துதல் மற்றும் 8 ஆம் நாளில் மறு பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்று MOHFW தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 82 நாடுகளில் முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றதற்கான சான்றிதழைப் வைத்திருக்கும் பயணிகளுக்கு சில தளர்வுகளை அரசு வழங்குகிறது.

இதனை முன்னிட்டு மத்திய சுகாதார அமைச்சகம், அந்த 82 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மலேசியா, ஓமான், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், மாலத்தீவுகள், நியூசிலாந்து, நெதர்லாந்து, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அந்த பட்டியலில் அமீரகம் இடம்பெறாததால், அமீரகத்திலிருந்து பயணிக்கும் இந்தியர்கள் 72 மணி நேரத்திற்கு வேலடிட்டியான PCR பரிசோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டும். மேலும் பயணிகள் இந்தியா சென்றதும் தனிமைப்படுத்திக் கொள்ள அவசியமில்லை என்று MOHFW தெரிவித்துள்ளது.

7 Shares
Share via
Copy link