குழந்தைகள் மீது ஆன்லைன் கேம்களின் ஆபத்துகள் மற்றும் தாக்கங்கள் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை அஜ்மான் காவல்துறை நடத்தியுள்ளது.
பாதுகாப்பை மேம்படுத்த குழந்தைகள் மீதான மின்னணு கேம்களின் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் பெற்றோர்களுக்ககு விளக்கினர்.
அஜ்மான் காவல்துறையின் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் தலைவர் மேஜர் நூரா சுல்தான் அல் ஷம்சி, ஆன்லைன் கேம்களின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க காவல்துறையின் முயற்சியாக இந்த பிரச்சாரம் நடத்தப்பட்டது என்றார்.
கேம்களின் அதீத வளர்ச்சியால், பயனர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் ஆடியோ உரையாடல்கள் ஆன்லைனில் கசியப்படுகிறது.
குழந்தைகளிடம் மொபைல் போன் வழங்கப்படுவதால் அவர்களுக்கு தெரியாமலேயே தரவுகள் திருடப்படுகின்றன. புகைப்படங்கள் போன்றவற்றை காட்டி மிரட்டல், பணம் பறித்தல் போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து தவிர்க்க மொபைல் போனை அளவோடு உபயோகிக்க வேண்டும்.
தங்கள் குழந்தைகள் ஆன்லைனில் கேம்களை விளையாடும்போது பெற்றோர்கள், உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு மேஜர் நூரா சுல்தான் அல் ஷம்சி தெரிவித்தார்.