அமீரகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வானிலை நிலவரம் என்ன??

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மழை பெய்வதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வானிலை மையம் கூறுகையில் ஓரளவு மேகமூட்டத்தின் காரணமாக இன்று வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

வெப்பநிலை UAE உள்பகுதிகளை பொருத்தவரை 41 – 46 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், கடற்கரை சார்ந்த பகுதிகளில் 38 – 43 டிகிரி செல்சியஸ் மற்றும் மலை பகுதிகளில் 27 – 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை மையம் கூடுதல் தகவல் வெளியிட்டுள்ளது.

Source: Khaleej Times