UAE Tamil Web

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் தாயார் துபாயில் காலமானார்..!

ZareenMusharraf

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் மற்றும் தலைமை ராணுவ ஜெனரலான பர்வேஸ் முஷாரப் அவர்களின் தாயார் ஸரீன் பேகம் துபாயில் நேற்று காலமானார். அவருக்கு வயது 100.

- Advertisment -

சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த ஸரீன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பாகிஸ்தான் தலைமை ராணுவ அதிகாரி கமார் ஜாவித் பஜ்வா (Qamar Javed Bajwa) தனது இரங்கலை ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்திருக்கிறார்.

1920 களில் லக்னோவில் பிறந்த ஸரீன், அங்கேயே தனது பள்ளிப்பருவத்தை முடித்தார். அதன்பிறகு டெல்லி பல்கலைகழகத்தின் இந்திரப்பிரஸ்தா கல்லூரியில் ஆங்கிலம் இளங்கலை பயின்றார்.

முஷாரப்பும் தற்போது துபாயில் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.