அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் நேற்று மே 13, 2022 முதல் நான்கு மாதங்களுக்கு இலவச மண்டலங்கள் உட்பட, இந்திய குடியரசில் இருந்து வரும் கோதுமை மற்றும் கோதுமை மாவின் ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.
இந்த தீர்மானமானது அனைத்து கோதுமை வகைகளுக்கும் (ஸ்பெல்ட்) பொருந்தும், அதாவது கடினமான, சாதாரண மற்றும் மென்மையான கோதுமை, மற்றும் கோதுமை மாவு வகைகள் என்று அனைத்திற்கும் பொருந்தும்.
நாட்டின் வர்த்தக ஓட்டத்தை பாதித்துள்ள சர்வதேச முன்னேற்றங்கள் மற்றும் அமீரகத்தையும் இந்தியாவையும் இணைக்கும் திடமான மற்றும் மூலோபாய உறவுகளைப் மேன்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (Cepa) கையெழுத்தான நிலையிலும் மற்றும் உள்நாட்டு நுகர்வுக்காக அமீரகத்திற்கு கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகும் இந்த தடை அமலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மே 13ம் தேதிக்கு முன்னர் அமீரகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்தியவைச் சேர்ந்த கோதுமை மற்றும் கோதுமை மாவு வகைகளை ஏற்றுமதி/மறு ஏற்றுமதி செய்ய விரும்பும் நிறுவனங்கள், அமீரகத்திற்கு வெளியே ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியைப் பெற அமைச்சகத்திடம் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.