UAE Tamil Web

நம்பர் பிளேட்டையும் விட்டுவைக்காத கும்பல் – ஆட்டையப்போட்ட 4 பேரை மடக்கிப்பிடித்த துபாய் காவல்துறை!

துபாயில் வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களில் இருந்து நம்பர் பிளேட்டுகளை திருடிய கும்பலை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களில் இருந்து 4 பேர் கொண்ட கும்பல் நம்பர் பிளேட்டுகளை திருடியுள்ளனர். தொடர்ந்து திருட்டு சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டதை அடுத்து மர்மகும்பலை அதிகாரிகள் வலைவீசி தேடினர். பின்னர் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று நம்பர் பிளேட்டுகளுடன் கையும் களவுமாக 4 பேரையும் துபாய் காவல்துறை கைது செய்தது. இரவு நேரங்களில் நம்பர் ப்ளேட்டுகளை திருடி அதனை கடத்தல் கும்பலிடம் கொடுத்து பணம் பெற்று வந்ததாக 4 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு விசாரணை முடியும் வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

1 Share
Share via
Copy link