அமீரகத்தின் மீது தொடர் தாக்குதல்களை ஈடுபட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமீரக அரசின் பாதுகாப்பு அமைச்சகம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் ஆதரவளித்துள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமீரகத்தின் மீது தாக்குதல் நடத்த அனுப்பட்ட ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அமீரகம் அழித்தது. இதனால் அமீரகத்திற்கு, அமெரிக்கா ஆதரவளித்துள்ள நிலையில், நேற்று பிரான்ஸ் நாடும் ஆதரவளிப்பதாக தெரிவித்தது. மேலும் ரபேல் விமானங்களையும், ராணுவ வீரர்களை வழங்கவுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரான்ஸ் ஆயுதப்படை அமைச்சர் பார்லி “அமீரகம் கடுமையான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் மீதான ஒற்றுமையைக் நிலைநாட்ட பிரான்ஸ் ராணுவ ஆதரவை வழங்கும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக அச்சுறுத்தலுக்கு எதிராக அமீரகத்திற்கு உதவும் வகையில், 5 ஆம் தலைமுறை போர் விமானங்களையும், போர்க் கப்பல்களையும் அனுப்பும் முடிவை அமெரிக்க எடுத்துள்ளது. மேலும் ஏவுகணைகளை அழிக்கும் யு.எஸ்.எஸ் கோல் என்ற அமைப்பை வழங்குவதாகவும், அது கடற்படையுடன் இணைந்து செயல்படும் என்று தெரிவித்தது குறிப்பிடத்ததக்கது.