UAE Tamil Web

ஆப்கானிஸ்தானில் சிக்கிக்கொண்ட எங்களது மக்களை மீட்க உதவியதற்கு நன்றி – அமீரகத்திற்கு நன்றி தெரிவித்த பிரான்ஸ்..!

airport (2)

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை முழுவதுமாக கைப்பற்றி இருக்கும் நிலையில், அந்நாட்டில் அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் ஆப்கானிஸ்தானில் சிக்கிக்கொண்ட தங்களது மக்களை பல்வேறு நாடுகளும் சிறப்பு விமானங்கள் மூலமாக அந்நாட்டில் இருந்து வெளியேற்றி வருகின்றனர்.

அமீரகம், ஆப்கானிஸ்தானில் இருந்த அமீரக அதிகாரிகள் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த மக்களை மீட்கும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் ஆயுதப்படை அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி அமீரக மாநிலங்களுக்கான பாதுகாப்பு துறை அமைச்சரான முகமது பின் அஹ்மத் அல் போவார்த்தியை போனில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த பிரான்ஸைச் சேர்ந்த மக்களை மீட்க உதவியதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்த பிரான்ஸ் அமைச்சர்,  இருநாடுகளுக்கு இடையேயான நட்பு உணர்வின் பிரதிபலிப்பு இந்த செயல் என குறிப்பிட்டார். மேலும் இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து இரு தலைவர்களும் கலந்து ஆலோசித்தனர்

airport (2)
0 Shares
Share via
Copy link