34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

போலியான சிறப்பு விமான முன்பதிவு – இந்திய துணைத் தூதரகம் எச்சரிக்கை!

charted flight

இந்தியாவிற்குச் செல்லும் சிறப்பு விமானங்களுக்கான முன்பதிவு செய்வதாகக்கூறி பணம் வசூலிக்கும் போலியான நபர்களை நம்பவேண்டாம் என அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களை துபாயிலிருக்கும் துணைத் தூதரக தலைமை அதிகாரி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து துணைத் தூதரகம் ஊடகங்களுக்கு அளித்த செய்தியில்,” அமீரகத்திலிருக்கும் சில நபர்கள் மற்றும் டிராவல் ஏஜென்சிக்கள் அமீரக வாழ் இந்தியர்களை அழைத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக கூறியிருக்கிறார்கள். மேலும், சிலரிடம் இந்த விமான டிக்கெட் மற்றும் இந்தியாவில் குவாரண்டைனுக்கு ஆகும் தொகைகளுக்கான முன்தொகையை வசூலிக்க முயற்சித்திருக்கிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில்,” அமீரகம் – இந்தியா இடையிலான சிறப்பு விமானப் போக்குவரத்து துவக்கம் குறித்த எந்த அறிவிப்பையும் இந்திய அரசு வெளியிடவில்லை என அமீரக வாழ் இந்தியர்களுக்கு அறிவுறுத்துவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கொரோனா பாதிப்பினால் நிறுத்தப்பட்டிருக்கும் இந்தியா – அமீரகம் இடையிலான விமானப் போக்குவரத்து மீண்டும் துவங்கும் வரையில், இந்த இருநாடுகளுக்கு இடையேயான சிறப்பு விமான சேவை குறித்து இந்திய அரசு முடிவெடுத்த பின்னர் அம்முடிவு துணைத் தூதரகத்திற்கு தெரிவிக்கப்படும்” என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் அமீரக வாழ் இந்தியர்கள் இம்மாதிரியான போலியான விமான முன்பதிவு செய்வதாகக் கூறி பணம் பறிக்கும் நபர்கள் மற்றும் டிராவல் ஏஜென்சியை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!